மக்களிடம் ஒரு வித்தியாசமான மோசடி... போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை !!

மக்களிடம் ஒரு வித்தியாசமான மோசடி... போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை !!

மக்களிடம் ஒரு வித்தியாசமான மோசடி... போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை !!
X

தற்போது அதிகரித்து வரும் நவீனக்கால மோசடி ஒன்று போலீசாரையும் பொதுமக்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் மோசடிக்கும்பல் ஒருசில குறிப்பிட்ட நபர்களை தேர்வுசெய்து அவர்களுக்கு செல்போனில் அழைக்கின்றனர். அப்போது, மோசடி கும்பலைச் சேர்ந்தவர் பேசுகையில், தான் ஒரு காவல்துறை அதிகாரி என்றும், நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறிவிட்டீர்கள், அல்லது உங்கள் உறவினர் ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறிவிட்டார். ஆகவே, நீங்கள் அபராதம் செலுத்தவேண்டும் என்று தொலைபேசியில் கூறுவார்.

அத்துடன், நீங்கள் எவ்வளவு சீக்கிரம் அபராதம் செலுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு அபராதம் குறையும், அதற்கு மேல் எந்த விசாரணையும் இருக்காது என்றும் தெரிவிக்கிறார்.

ஒரு வித்தியாசமான மோசடி... பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை

நாம் எங்கையாது போக்குவரத்து விதிகளை மீறியிருப்போம், எதற்கு வம்பு என மக்களும் யோசிக்காமல் அபராதத் தொகையை செலுத்திவிடுகின்றனர். இந்த வகையில் இதுவரை பலர் ஏமாந்துள்ளார்கள். இதுவரை அப்படி ஏமாந்த தொகை சுமார் 800,000 சுவிஸ் ஃப்ராங்குகள் மோசடி கும்பல் மக்களிடம் பறித்துள்ளதாக கூறுகின்றனர்.

இது குறித்து போலீசாருக்கு புகார்கள் குவிந்துள்ளது. எனினும் அவர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள போலிசார், தாங்கள் ஒருபோதும் தொலைபேசியில் பணம் கேட்பதில்லை என்று கூறியுள்ளார்கள். குறிப்பாக, மக்கள் தங்கள் உறவினர்களான முதியவர்களிடம் இந்த விடயம் குறித்து எடுத்துக் கூறி அவர்களை எச்சரிக்குமாறு போலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.


newstm.in


Tags:
Next Story
Share it