Theme Check

கடன் பிரச்சனையால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட கொடூரம்..!! புதுச்சேரியில் பரபரப்பு..!!

கடன் பிரச்சனையால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட கொடூரம்..!! புதுச்சேரியில் பரபரப்பு..!!

கடன் பிரச்சனையால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட கொடூரம்..!! புதுச்சேரியில் பரபரப்பு..!!
X

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தபால்காரர் வீதியை சேர்ந்தவர் தியாகராஜன். ஆட்டோ ஒட்டுநரான இவருக்கு செல்வி என்ற மனைவியும், லட்சுமி தேவி (8) என்ற ஒரு மகளும், ஆகாஷ் (5) என்ற ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

puducherry

இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் தியாகராஜனுக்கு கடன் தொல்லை இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு முதல் இன்று காலை வரை குடும்பத்தினர் யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தனர்.

அப்போது நான்கு பேரும் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசார் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

puducherry

முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாக ஆட்டோ ஓட்டுநர் தியாகராஜன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story
Share it