சென்னையில் மாஸ்டர் படம் பார்க்க ஒரு தியேட்டரையே புக் செய்த ரசிகை !!

சென்னையில் மாஸ்டர் படம் பார்க்க ஒரு தியேட்டரையே புக் செய்த ரசிகை !!

சென்னையில் மாஸ்டர் படம் பார்க்க ஒரு தியேட்டரையே புக் செய்த ரசிகை !!
X

சென்னைக்கு வந்து மாஸ்டர் படத்தை பார்க்க மலேசியப் பெண் ஒருவர் செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருக்கு விஜய் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

திரையரங்குகளில் நேரடியாக வெளியான மாஸ்டர் படம், கடந்த வாரம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்திலும் ரிலீஸ் செய்யப்பட்டது. எனினும், திரையரங்குகளில் இந்த படத்தை காண ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்தியாவில் அனைத்து திரையரங்குகளிலும் இப்படம் வெளியாகியுள்ளது. ஆனால் கொரோனா பரவலை காரணம் காட்டி, இன்னும் சில நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியாவிலும் இதே நிலை தான்.அந்நாட்டைச் சேர்ந்த ஆஷ்லினா என்கிற தமிழ் பெண் மாஸ்டர் படத்தை திரையரங்கில் காண மிகவும் ஆவலாக இருந்துள்ளார். ஆனால் மலேசியாவில் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாததால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மேலும், அவர் ஓ.டி.டி தளத்திலும் படத்தை காண ஆர்வம் காட்டவில்லை. மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் காணவே அவர் அதிக விருப்பம் கொண்டிருந்தார். இதனால் இந்தியாவுக்கு வந்து படத்தை பார்க்க அவர் முடிவு செய்தார்.

இதற்காக அவர் பலமுறை முயற்சித்தும் இந்தியாவுக்கு வர முடியவில்லை. தொடர்ந்து விடாமல் முயற்சி செய்து சென்னைக்கு வந்து சேர்ந்தார். கொரோனாவுக்குரிய நடைமுறைகளை முடித்துவிட்டு, முதல் வேலையாக சென்னை தியேட்டர்களுக்கு சென்று டிக்கெட் தேடினார். எங்கும் டிக்கெட் கிடைக்கவில்லை.சென்னையில் வசிக்கும் ஆஷ்லினாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாரும், அவருக்காகவே மாஸ்டர் படம் பார்க்காமல் இருந்தனர். உடனே யோசித்த அவர், சென்னை அண்ணா சாலையிலுள்ள 150 இருக்கைகள் கொண்ட திரையரங்கத்தை மொத்தமாக புக்கிங் செய்தார்.

தனது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைத்துக் கொண்டு மாஸ்டர் படத்தை பார்த்தார். விஜய்யின் அதிரடி காட்சிகள், பாடல்கள் வரும்போது எல்லாம் கத்தி விசில் தட்டி ரசித்தார். மொத்தமாக மாஸ்டர் படத்தை அவர் அணு அணுவாக கொண்டாடித் தீர்த்தார்.

இதுதொடர்பாக புகைப்படங்கள் மற்றும் தகவலை அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது விஜய் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Tags:
Next Story
Share it