மருமகளை கோடாரியால் வெட்டிக்கொன்ற மாமனார்.. உல்லாசத்திற்கு மறுத்ததால் கொடூரம்!!
மருமகளை கோடாரியால் வெட்டிக்கொன்ற மாமனார்.. உல்லாசத்திற்கு மறுத்ததால் கொடூரம்!!

ஆசைக்கு இணங்க மறுத்ததால் மருமகளை கோடாரியால் வெட்டி கொலை செய்ததாக மாமனார் சரணடைந்தார். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அடுத்துள்ள உலிபுரம் நரிக்கரடு பகுதியை சேர்ந்தவர் அறிவழகன்(48). இவர் சொக்கநாத புரம் கூட்டுறவு சங்கத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். அறிவழகன் தனது மனைவி, 2 மகன்களுடன் தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அறிவழகன் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். அறிவழகனின் தந்தை பழனி, அவரது தோட்டத்து வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த மகனின் மனைவியை கோடாரியால் வெட்டி கொலை செய்துவிட்டு நேராக தம்மம்பட்டி காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார். இதையடுத்து, சம்பவம் நடந்த இடமான அறிவழகனின் தோட்டத்து வீட்டிற்கு போலீசார் சென்றனர்.
அங்கு தலை, கை, இடுப்பு ஆகிய இடங்களில் கோடாரியால் வெட்டப்பட்ட நிலையில், அமுதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதையடுத்து அமுதாவின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சரணடைந்த பழனியை கைது செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது மருமகள் அமுதாவை அடையவேண்டும் என நீண்டநாட்களாக விரும்பினேன். எனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்த போது மறுத்து விட்டார்.
இதனிடையே அவருக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் தன்னுடனும் உல்லாசமாக இருக்க அழைத்தேன் அதற்கு அவர் மறுத்தார். எனினும் நான் வலுக்கட்டாயமாக கட்டி அணைத்தபோது கூச்சலிட்டதால் ஆத்திரத்தில் அருகில் இருந்தகேடாரியை எடுத்து சரமாரியாக வெட்டிக்கொன்றேன், என தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

