திருமணம் முடிந்த சில நாட்களில் மணமகனின் ஆணுறுப்பை துண்டித்த மணமகள் வீட்டார் !!
திருமணம் முடிந்த சில நாட்களில் மணமகனின் ஆணுறுப்பை துண்டித்த மணமகள் வீட்டார் !!

மணமகள் குடும்பத்தினர், மணமகனின் ஆண் உறுப்பை துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லியின் சாகர்பூர் பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 22 வயது இளைஞரும், இளம்பெண்ணும் 3 ஆண்டுகளாக நெருங்கிப் பழகியுள்ளனர். காதலித்து வந்த அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு பதிவுத் திருமணம் செய்துக்கொண்டனர்.
ஆனால், இந்த திருமணத்துக்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. எனினும் தம்பதி வெளியூர் தங்கியிருந்தனர். பின்னர் எதிர்ப்பை சமாளிக்க ரஜவ்ரி பூங்கா காவல் நிலையத்தில், திருமணம் தொடர்பான தகவல்களை அளிக்க தம்பதிகள் சென்றுள்ளனர். இந்த தகவலை பெண்ணின் வீட்டார் அறிந்துகொண்டனர்.

இதனையடுத்து, அவர்களுக்காக காவல்நிலையத்துக்கு வெளியே இளம்பெண்ணின் உறவினர்கள் காத்துக் கொண்டிருந்தனர். மணமகளின் உறவினர்கள், மணமகன் வெளியே வந்தபோது அவரைத் தூக்கிச் சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தினர். மணப்பெண்ணின் தந்தை, சகோதரர், மாமா உள்ளிட்டோர் நடத்திய தாக்குதலில், மணமகனின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உச்சகட்டமாக, மணமகனின் ஆணுறுப்பை மணமகளின் குடும்பத்தினர் துண்டித்தனர்.
தற்போது மணமகன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் தொடர்பாக ரஜவ்ரி பூங்கா போலீசார் கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

