Theme Check

ஜாமீனில் வெளியே வந்த சில மணி நேரங்களில் ரவுடி வெட்டிக் கொலை!!

ஜாமீனில் வெளியே வந்த சில மணி நேரங்களில் ரவுடி வெட்டிக் கொலை!!

ஜாமீனில் வெளியே வந்த சில மணி நேரங்களில் ரவுடி வெட்டிக் கொலை!!
X

கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சில மணி நேரங்களில் பிரபல ரடிவு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி குண்டார் () சக்திவேல் (35) மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் கொலை வழக்கு தொடர்பாக 2021 நவம்பர் மாதம் கைதாகி மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று மதியம் 3.30 மணிக்கு ஜாமீனில் வெளியே வந்த அவர், தனது இரு சக்கர வாகனத்தில் சோழவந்தான் அருகே சென்றுகொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்து படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.

mdu murder

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காடுபட்டி போலீசார், கொலை செய்யப்பட்ட சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட சக்திவேல் மூன்றுக்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்றும், இவரால் கொலை செய்யப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட ஏதோ ஒரு கும்பல் பழிக்கு பழியாக கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது.

கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க மாவட்ட எஸ்பி சிவபிரசாத் உத்தரவின் பேரில், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it