நகைக்கடையில் துளையிட்டு புகுந்த கொள்ளை கும்பல்.. போலீஸ் விசாரணை !!
நகைக்கடையில் துளையிட்டு புகுந்த கொள்ளை கும்பல்.. போலீஸ் விசாரணை !!

நகைக்கடையின் சுவரில் துளையிட்டு புகுந்த கொள்ளை கும்பல் சுமார் 6 கிலோ வெள்ளி 2 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது.
தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் சாந்தி நகரைச் சேர்ந்த முருகன் என்பவர் சிதம்பரநகரில் எம்எம்எஸ் என்ற பெயரில் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்றிரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டு காலையில் வழக்கம்போல் கடையை திறந்துள்ளார்.
அப்போது கடையின் உள்ளே பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், உள்ளே சென்று பார்த்தபோது பின்பக்க சுவரில் துளையிட்டு கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் வந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

