Theme Check

பைக்கில் சென்ற அதிமுக பிரமுகரை வழிமறித்து படுகொலை செய்த கும்பல்.. 

பைக்கில் சென்ற அதிமுக பிரமுகரை வழிமறித்து படுகொலை செய்த கும்பல்..

பைக்கில் சென்ற அதிமுக பிரமுகரை வழிமறித்து படுகொலை செய்த கும்பல்.. 
X

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (40). கோவில்பட்டி நகராட்சி 5-வது வார்டு அதிமுக பிரதிநிதியாக இருந்த இவர், நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சங்கரலிங்கபுரம் செல்லும் வழியில் உள்ள கோயில் முன்பு அவரை வழி மறித்த மர்ம நபர்கள் சிலர், திடீரென கரும்பை கொண்டு தாக்கியுள்ளனர். இதனால் நிலைகுலைந்த பாலமுருகன் கீழே விழுந்துள்ளார்.

பைக்கில் சென்ற அதிமுக பிரமுகரை வழிமறித்து படுகொலை செய்த கும்பல்..

அப்போது மர்ம நபர்கள் பாலமுருகனின் இடுப்பு பகுதி மற்றும் கழுத்து பகுதியில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை கண்ட அப்பகுதியினர் அளித்த தகவலறிந்து காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பைக்கில் சென்ற அதிமுக பிரமுகரை வழிமறித்து படுகொலை செய்த கும்பல்..

பாலமுருகன் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்காக தீவிரமாக வேலை பார்த்து வந்தார். உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமா கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it