Theme Check

அவனியாபுரத்தில் ஆறுதல் பரிசை மறுத்த இளம்பெண்.. கோவை ஜல்லிக்கட்டில் கலக்கிய காளை !!

அவனியாபுரத்தில் ஆறுதல் பரிசை மறுத்த இளம்பெண்.. கோவை ஜல்லிக்கட்டில் கலக்கிய காளை !!

அவனியாபுரத்தில் ஆறுதல் பரிசை மறுத்த இளம்பெண்.. கோவை ஜல்லிக்கட்டில் கலக்கிய காளை !!
X

மாணவி யோகதர்ஷினியின் காளை வெற்றி பெற்றதை அடுத்து அவர் பரிசை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றார். இவர் வீரத்துடன் சென்று பரிசு பெற்றதன் பின்னணியில் ஒரு கதையும் இருக்கு.

மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்த யோகதர்ஷினி என்ற மாணவி, அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் தனது காளையை களமிறக்கினார். இந்த போட்டியில் யோகதர்ஷினியின் காலை பிடி மாடு ஆனது. இதனால் அவருக்கு பரிசு கிடைக்காத நிலை ஏற்பட்டது.

mdu jallikattku

எனினும் காலையை அழைத்துவந்த அவருக்கு ஆறுதல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால் தனது காளை பிடிமாடி ஆனதால் எனக்கு ஆறுதல் பரிசு வேண்டாம், எனது மாடு எப்போது வெற்றி பெறுகிறதோ அப்போது பரிசை பெற்றுக் கொள்கிறேன் எனக்கூறிவிட்டு யோகதர்ஷினி நடையை கட்டினார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

mdu jallikattku

இந்நிலையில் இவர் தனது காளையுடன் கோவை செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டார். மேலும் இந்த போட்டியில் அவரது காளை வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து யோகதர்ஷினிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தங்க நாணயம், தண்ணீர் அண்டா, ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கினார்.

இதனால் தான் சொன்னதுபோன்றே ஆறுதல் பரிசு அல்லாமல் வெற்றியுடன் பரிசுகளை பெற்றதாக கூறியுள்ளார். இதுகுறித்து யோகதர்ஷினி கூறுகையில், நான்கு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் கோவைக்கு இப்போதுதான் முதன்முறையாக வந்து ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டுள்ளேன்.

mdu jallikattku

அவனியாபுரத்தில் எனது மாடு பிடி மாடு ஆனதால் நான் பரிசு பெறவில்லை. தற்போது எனது காளை வெற்றி பெற்றுள்ளது. அமைச்சர் கையால் பரிசுகளை பெற்றுள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it