Theme Check

ஒரு லிட்டர் நாகப்பாம்பு விஷம் ஒரு கோடி ரூபாய்.. மிரண்டுபோன வனத்துறையினர் !!

ஒரு லிட்டர் நாகப்பாம்பு விஷம் ஒரு கோடி ரூபாய்.. மிரண்டுபோன வனத்துறையினர் !!

ஒரு லிட்டர் நாகப்பாம்பு விஷம் ஒரு கோடி ரூபாய்.. மிரண்டுபோன வனத்துறையினர் !!
X

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாவட்ட வனப்பகுதியில் பாம்பு விஷம் கடத்தப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனைடுயடுத்து பாம்பு விஷம் வாங்குபவர்களை போல வனத்துறையினர் குறிப்பிட்ட பகுதிக்கு சென்றனர். அங்கு பாம்பு விஷம் கடத்தும் கும்பலை சந்தித்து விலை பேசினர்.

அதாவது, இந்த பாம்பு விஷத்தை 10 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக அவர்கள் விலை பேசியுள்ளனர். இதற்காக 5மிமீ அளவு கொண்ட மாதிரிகளை அவர்கள் சேம்பிளுக்காக வைத்திருந்தனர். அதனை உறுதி செய்த வனத்துறையினர் உடனடியாக அவர்களை சுற்றிவளைத்து அதிரடியாக ஒரு பெண் உட்பட 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

இருப்பினும் வனத்துறையினரிடம் சிக்கியவர்களிடம் விசாரித்த போது, அந்த குடுவைகளில் என்ன இருந்தது என்று தங்களுக்கு தெரியாது என்றும் இந்த குடுவையில் மருந்து இருப்பதாக தெரிவித்த கவுதம் என்ற நபர் இதனை ஒருவரிடம் கொடுக்க வேண்டும் என்று கொடுத்து அனுப்பியதாக தெரிவித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஒரு லிட்டர் விஷத்தில் மதிப்பு சர்வதேச சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகம் என்றும், ஒரு லிட்டர் விஷத்தை சேகரிப்பதென்றால் 200 நாகங்களிலிருந்து விஷம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் வன அதிகாரி அசோக் மிஸ்ரா கூறினார்.

வனவிலங்கு பாதுகாப்பு தடை சட்டத்தின் 9, 39, 44, 49 மற்றும் 51 என 5 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 6 பேரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

newstm.in

Tags:
Next Story
Share it