Theme Check

ரூ.1-க்கு ஒரு லிட்டர் பெட்ரோல்.. குவிந்த வாகன ஓட்டிகள் !!

ரூ.1-க்கு ஒரு லிட்டர் பெட்ரோல்.. குவிந்த வாகன ஓட்டிகள் !!

ரூ.1-க்கு ஒரு லிட்டர் பெட்ரோல்.. குவிந்த வாகன ஓட்டிகள் !!
X

இந்தியாவில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருப்பது பெட்ரோல், டீசல் விலை உயர்வு. அதாவது, பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

அதேநேரத்தில் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாதிலங்களில் பேருந்து கட்டணம் உயர்வு, ஓட்டல்களில் உணவு விலையும் அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மகாராஷ்டிராவின் சோலாப்பூர் நகரில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.1 ரூபாய்க்கு விற்கப்பட்டது நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டிகளிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெட்ரோலை வாங்க பெட்ரோல் பங்கில் பொதுமக்கள் அதிகமான அளவில் கூடியதால் அங்கு கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
petrol
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டியும் விலை வாசி உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், டாக்டர் அம்பேத்கர் மாணவர்கள் மற்றும் இளைஞர் சிறுத்தைகள் அமைப்பு இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. பெட்ரோல் பங்கில் ஒருவருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் மட்டுமே 1 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. சுமார் 500 பேருக்கு 1 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல் பங்கில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 120 ரூபாயை எட்டியுள்ளது. எனவே மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளைக் கொண்டாடவும், ஒரு ரூபாய்க்கு பெட்ரோல் வழங்க முடிவு செய்ததாக அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

newstm.in

Next Story
Share it