Theme Check

சற்று ஆறுதல்.. கேஸ் சிலிண்டர் விலை ரூ.103.50 குறைப்பு !!

சற்று ஆறுதல்.. கேஸ் சிலிண்டர் விலை ரூ.103.50 குறைப்பு !!

சற்று ஆறுதல்.. கேஸ் சிலிண்டர் விலை ரூ.103.50 குறைப்பு !!
X

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. அந்தவகையில், கடந்த மாதம் (டிசம்பர்) விலை அதிகரித்து வீட்டு உபயோக கேஸ் சிலிணடர் சென்னையில் ரூ.915.50 ஆக விற்கப்பட்டது. நடப்பு மாதத்திற்கு (ஜனவரி) கேஸ் சிலிண்டர் விலை அதிகரிக்குமா என மக்கள் கலக்கத்தில் இருந்தனர்.

india

இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நேற்று வெளியிட்டது. அதில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த மாத விலையிலேயே நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதேநேரத்தில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டுள்ளது. அதாவது, கடந்த மாத விலையில் இருந்து ரூ.103.50 குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் கடந்த மாதம் ரூ.2,234.50க்கு விற்கப்பட்ட வர்த்தக சிலிண்டர், நடப்பு மாதம் ரூ.103.50 குறைந்து, ரூ.2,131 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

india

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதால், வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. வரும் மாதத்திலும் விலை குறைய வாய்ப்புள்ளது என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

newstm.in

Next Story
Share it