Theme Check

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிறைய வளர்ச்சி திட்டங்கள்! EPS - OPS போட்டி போட்டு வரவேற்பு !

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிறைய வளர்ச்சி திட்டங்கள்! EPS - OPS போட்டி போட்டு வரவேற்பு !

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிறைய வளர்ச்சி திட்டங்கள்! EPS - OPS போட்டி போட்டு வரவேற்பு !
X

மத்திய அரசு பட்ஜெட்டில், வரவேற்கத்தக்க பல அம்சங்கள் இருப்பதாகவும், தமிழக வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு அறிவிப்புகளும் இடம் பெற்றுள்ளதாகவும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக முதல்வரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுதும் கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசு 35 ஆயிரம் கோடி ரூபாய் அறிவித்துள்ளதை மனதார வரவேற்கிறேன்.

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள, மத்திய அரசு எடுத்துள்ள அனைத்து முயற்சிகளுகும் பாராட்டுக்குரியவை. மேலும், தமிழகத்தில், 3,500 கி.மீ. நீள தேசிய நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை - கொல்லம்; சித்துார் - தச்சூர் வழித்தடங்கள் உள்ளிட்ட, தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் 1.03 லட்சம் கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேன்மேலும் உயர்த்தும். சென்னை, மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டத்திற்கும், கடல் பாசி உற்பத்தி பூங்கா திட்டத்திற்கும், மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுதும், மூன்று ஆண்டுகளில், ஏழு புதிய ஜவுளி பூங்காக்கள் உருவாக்கப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி, தென் மாவட்டங்களில், ஒரு ஜவுளி பூங்கா, சேலம் மாவட்டத்தில், மற்றொரு மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதேபோல, தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பல கோரிக்கைகள் மத்திய பட்ஜெட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது வரவேற்புகுரியது. பாராட்டுக்குரியது. கொரோனா பெருந்தொற்றில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ், வரும் மூன்று ஆண்டுகளில், மேலும், 100 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளது மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

மேலும், இரும்பு பொருட்கள் இறக்குமதி மீதான, சுங்க வரி முறையை மறு சீரமைக்க அறிவித்துள்ள நடவடிக்கையையும், நபார்டு வங்கியின், ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதிக்கு வழங்கப்பட்டுள்ள நிதி, 30 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து, 40 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தி உள்ளதும் பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வசைமாரி பொழிந்துள்ள நிலையில், தமிழக முதல்வரும், துணை முதல்வரும் போட்டி போட்டிக்கொண்டு வரவேற்று உள்ளனர்.

Tags:
Next Story
Share it