Theme Check

4 மாத குழந்தையை 3ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசிய குரங்கு!!

4 மாத குழந்தையை 3ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசிய குரங்கு!!

4 மாத குழந்தையை 3ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசிய குரங்கு!!
X

நான்கு மாத குழந்தை ஒன்று குரங்கால் மாடியில் இருந்து தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள துங்கா என்ற கிராமத்தைச் சேர்ந்த நிர்தேஷ் உபாத்யாய் என்பவருக்கு அன்மையில் இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்து நான்கே மாதம் ஆனது.

இந்நிலையில், அவர் தனது வீட்டின் மூன்றாம் மாடியில் குழந்தையை தூங்க வைத்து கொண்டிருந்தார். குழந்தை நன்றாக தூங்க வேண்டும் என்பதற்காகவே இவர் குழந்தையை மூன்றாம் மாடிக்கு கொண்டுவந்தார். அப்போது, திடீரென்று பல குரங்குகள் இவர்கள் இருந்த இடத்திற்குள் நுழைந்து சூழ்ந்து கொண்டன.

delhi monkey

பதறிப்போன நிர்தேஷ் கத்தி குரல் கொடுத்து தனது குடும்பத்தினரை அழைத்தர். குரல் கேட்டு இவர்களை காப்பற்ற உறவினர்கள் செல்வதற்குள், நிர்தேஷ் கையில் இருந்த குழந்தையை குரங்குகள் பறித்துக்கொண்டன.

சுதாரித்து குழந்தையை மீட்பதற்குள் மூன்றாவது மாடியில் இருந்து குழந்தையை குரங்குகள் தூக்கி வீசின. இதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவிற்கு குடும்பம் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த துயரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த பரேலி பகுதியின் தலைமை வன அலுவலர் லலித் வர்மா உத்தரவிட்டுள்ளார். பரேலி பகுதியில் குரங்குகள் மற்றும் தெரு நாய்களின் அட்டகாசம் பெருமளவில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it