Theme Check

வருடத்தில் 300 நாட்கள் தூங்கும் நபர்..! ஏன் தெரியுமா..?

வருடத்தில் 300 நாட்கள் தூங்கும் நபர்..! ஏன் தெரியுமா..?

வருடத்தில் 300 நாட்கள் தூங்கும் நபர்..! ஏன் தெரியுமா..?
X

ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர், வருடத்தில் 300 நாட்களை தூங்கியே கழிக்கிறார். இதனால், உள்ளூர் மக்கள் அவரை கும்பகர்ணன் என்று அழைக்கின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள நாகூரைச் சேர்ந்தவர் புர்காரம். 42 வயதாகும் இவர் ஆக்சிஸ் ஹைபர்சோம்னியா (Axis Hypersomnia) எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, வருடத்தில் 300 நாட்கள் வரை அவர் தூக்கத்திலேயே உள்ளார்.

சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நோயின் தாக்குதலுக்கு புர்காரம் உள்ளானார். நோயின் காரணமாக, தூக்கத்தில் விழுந்தார் என்றால் சுமார் 25 நாட்கள் வரை அவர் எழ மாட்டார். இதனால், உள்ளூர் மக்கள் அவரை கும்பகர்ணன் என்று அழைக்கின்றனர்.

நாகூரில் உள்ள பத்வா கிராமத்தில் பலசரக்கு கடை நடத்தி வரும் புர்காரம், இந்த விநோத நோய் காரணமாக மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே கடையை திறந்து வியாபாரம் செய்கிறார். தொடக்கத்தில், 5 முதல் 7 நாட்கள் வரை தூக்கத்தில் இருந்த புர்காரம் தற்போது 20 முதல் 25 நாட்கள் வரை தூங்குவதாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர். அவரை எழுப்புவதற்கு பெரும்பாடு பட வேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:
Next Story
Share it