திட்டம்போட்டு முதியவரை அனுபவித்த பெண்.. கரங்கடித்து பேத்தியை கடத்திச் சென்றது அம்பலம்
திட்டம்போட்டு முதியவரை அனுபவித்த பெண்.. கரங்கடித்து பேத்தியை கடத்திச் சென்றது அம்பலம்

முன்பின் தெரியாத பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசம் அணுபவித்த முதியவர், சோர்வு காரணமாக கண்மூடிய நேரத்தில் அவரது பேத்தியை அப்பெண் கடத்திச் சென்றுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருக்கும் அரசன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுடலை ராஜன். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து தந்தை மற்றும் தனது 3 வயது மகள் மகாலட்சுமியுடன் திருப்பூரில் வசித்து வருகிறார்.கடந்த இருதினங்களுக்கு முன் சுடலைராஜனின் தந்தை மாரி, தனது பேத்தியை அழைத்து கொண்டு பழனி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், மாரியிடம் தான் ஆதரவற்றவர் என்றும், தன்னை அழைத்து சென்றால் குழந்தையை நன்றாக பார்த்து கொள்வேன் எனவும் கூறியுள்ளார்.
மாரியும் எதையோ நினைத்து அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வரும்போது மதுவையும் வாங்கி வந்து, வீட்டில் வைத்து குடித்து அப்பெண்ணுடன் முதியவர் மாரி உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் சுடலை ராஜன் வேலைக்கு சென்றுள்ளார். மதுபோதையில் இருந்த மாரி நன்றாக தூங்கியிருக்கிறார். அப்போது குழந்தையை அழைத்து கொண்டு இளம்பெண் மாயமாகிவிட்டார். 
கண்விழித்து பார்த்த போது பேத்தியும் அப்பெண்ணும் இல்லாததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் இளம்பெண் ஒருவர் குழந்தையை அழைத்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் தனிப்படை அமைத்து குழந்தையை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
newstm.in


