Theme Check

இனி ஆதார் கார்டு செல்லாது.. மத்திய அரசு வெளியிட்ட பரபரப்புத் தகவல் !

இனி ஆதார் கார்டு செல்லாது.. மத்திய அரசு வெளியிட்ட பரபரப்புத் தகவல் !

இனி ஆதார் கார்டு செல்லாது.. மத்திய அரசு வெளியிட்ட பரபரப்புத் தகவல் !
X

ஆதார் என்பது 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் கொண்ட ஒரு அடையா அட்டை ஆகும். இதனை UIDAI எனப்படும் ஆதார் ஆணையம் வழங்குகிறது. இந்தியாவில் அரசு மற்றும் அரசு சாரா சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் தேவைப்படுகிறது.

அரசாங்க திட்டங்கள், குழந்தையை அனுமதிப்பது போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக தேவையான மிக முக்கியமான ஆவணங்களில் ஆதார் அட்டை ஒன்றாகும். இது அடையாளச் சான்றாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், வெளிச்சந்தையில் கிடைக்கும் ஆதார் பிவிசி கார்டுகள் செல்லாது என ஆதார் ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிச்சந்தைகளில் விற்பனையாகும் ஆதார் பிவிசி கார்டுகளை வாங்க வேண்டாம் என பொதுமக்களிடம் ஆதார் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. அதேநேரத்தில், ஆதார் பிவிசி கார்டு தேவைப்படுவோர் நேரடியாக ஆதார் ஆணையத்திடம் விண்ணப்பித்து அதிகாரப்பூர்வமாக பெற்றுக்கொள்ளலாம்.

aadhar

இதுகுறித்து ஆதார் ஆணையம் மேலும் கூறியிருப்பதாவது, வெளிச் சந்தைகளில் விற்பனையாகும் பிவிசி/பிளாஸ்டிக் ஆதார் கார்டுகள் செல்லாது. வெளிச் சந்தை பிவிசி ஆதார் கார்டுகளை நாங்கள் ஊக்குவிப்பதுமில்லை. 50 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆதார் பிவிசி கார்டு அதிகாரப்பூர்வமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

பிவிசி ஆதார் கார்டு பெற விரும்புவோரு ஆதார் இணையதளத்துக்கு சென்று அதில் உள்ள 'Order Aadhaar PVC Card' பிரிவில் 12 இலக்க ஆதார் எண் பதிவிட்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம். 50 ரூபாய் கட்டணம் செலுத்தினால் ஸ்பீடு போஸ்ட் வழியாக நேரடியாக உங்கள் வீட்டுக்கே அனுப்பப்படும்.

newstm.in

Tags:
Next Story
Share it