Theme Check

50 வயது பெண்ணுடன் தவறான உறவு.. இளைஞர் மீது கொடூர தாக்குதல் !!

50 வயது பெண்ணுடன் தவறான உறவு.. இளைஞர் மீது கொடூர தாக்குதல் !!

50 வயது பெண்ணுடன் தவறான உறவு.. இளைஞர் மீது கொடூர தாக்குதல் !!
X

வயதான பெண்ணுடன் தொடர்பில் இருந்த இளைஞனை கொடூரமாக தாக்கிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிரமமான கூக்கால் கிராமத்தில், 5 ஆண்டுகளுக்கு முன்பு உசிலம்பட்டியை சேர்ந்த தன்ராஜ் என்ற இளைஞர் குடியேறினார். அங்கு தனியார் தங்கும் நடத்தி வருகிறார். இந்த நிலையில், 32 வயது இளைஞரான இவருக்கு அதே கிராமத்தில் வசிக்கும் 50 வயதான பாலம்மாள் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

இப்பெண்ணுக்கு கணவர் இறந்த நிலையில், மகளை திருமணம் செய்து கொடுத்த நிலையில் தன்ராஜ் விடுதியில் பணி புரிந்து வந்துள்ளார். அப்போது விடுதி உரிமையாளரான இளைஞனுக்கும், பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த பழக்கம் நெருக்கமாகி இருவரும் கணவன், மனைவி போல் கடந்த 3 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

police

இதனையடுத்து வயதான பெண்ணின் உறவினர்கள் பலமுறை அறிவுறுத்தியும் இளைஞரும் கேட்டபாடில்லை. இதனால் வயதான பெண்ணின் உறவினர்களுக்கும் இளைஞனுக்கும் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து கூக்கால் கிராமத்தில் கடந்த வாரம் திருவிழா நடைபெற்றபோது, அங்கு தன்ராஜ் சென்றுள்ளார். அப்போது மது போதையில் இருந்த வயதான பெண்ணின் தம்பி பூவேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து தன்ராஜ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தன்ராஜ் கை, கால்களை கயிற்றால் கட்டியும், கல்லால் தலை மற்றும் உடல் பகுதிகளில் கொடூரமாக தாக்கியுள்ளனர். அவரது அலறல் சத்தம்கேட்டு சென்ற அவருடன் தொடர்பில் இருந்த வயதான பெண் மற்றும் அப்பகுதி மக்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த இளைஞனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

police

தற்போது இந்த இளைஞன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும் இளைஞனை 4 நபர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கும் விடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து கொலை முயற்சி உள்ளிட்ட 5 வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இந்த 4 நபர்களையும் தேடி வருகின்றனர்.


newstm.in

Next Story
Share it