Theme Check

ஆபாச நடிகர் மீது குவியும் பாலியல் புகார்கள்.. 300 ஆண்டுகள் சிறைத் தண்டனையா?

ஆபாச நடிகர் மீது குவியும் பாலியல் புகார்கள்.. 300 ஆண்டுகள் சிறைத் தண்டனையா?

ஆபாச நடிகர் மீது குவியும் பாலியல் புகார்கள்.. 300 ஆண்டுகள் சிறைத் தண்டனையா?
X

உலகம் முழுவதும் பிரபலமானவர் ஆபாச நடிகர் ரொனால்டு ஜெரேமி. அமெரிக்காவைச் சேர்ந்த இவர் 1979ஆம் ஆண்டு முதல் ஆபாச திரைப்படங்களில் நடித்து வருகிறார். சுமார் 1,700 ஆபாச திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இவர் மீது அவ்வப்போது பாலியல் குற்றச்சாட்டுகளும் எழுந்தது.

ஆபாச படங்களில் நடித்தாலும் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் குவிந்தது. இவர் மீது 34 பாலியல் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 15 வயது சிறுமி முதல் 51 வயது பெண் வரை ரொனால்டு ஜெரேமி பாலியல் குற்றங்களை செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் 20 ஆண்டுகளில் சுமார் 34 பாலியல் குற்ற சம்பவங்களில் இவர் ஈடுபட்டுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

ron jeremy

ஏற்கெனவே ஒரு சில வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜெரேமி மீது தற்போது மேலும் சில குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் இவர் 2014-2019 ஆண்டு காலங்களில் 3 பெண்கள் மீது பாலியல் சீண்டல் செய்த வழக்கில் ஆஜர் படுத்தப்பட்டிருந்தார்.

ron jeremy

அப்போது இவருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர், ஜெரேமி மீது எந்தவித தவறும் இல்லை. இவர் ஒரு ஆபாச நடிகர் என்பதால் இவர் மீது ஆர்வம் கொண்டே பெண்கள் இவருடம் வருகின்றனர் எனக் கூறினார். அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.

ஜெரேமி மீது மேலும் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு 15 வயது சிறுமியையும், 2008ஆம் ஆண்டு 17 வயது சிறுமி ஒருவரையும் இவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் அவரது வழக்கில் நீதிமன்றமே அதிர்ச்சி அடைந்துள்ளது.

ron jeremy

அனைத்து வழக்குகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்குக மொத்தமாக 300 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it