5 மாத கர்ப்பிணி மகள் மீது ஆசிட் வீச்சு. துடிக்க துடிக்க தந்தை செய்த கொடூரம்..!
5 மாத கர்ப்பிணி மகள் ஆசிட் வீசிய கொடுர தந்தை.. துடிக்க துடிக்க தந்தை செய்த கொடூரம்..!

திருவள்ளூர் அருகே காதலித்து திருமணம் செய்த மகளின் முகத்தில் அமிலம் வீசி அடித்து உதைத்த கொடுமை செய்த தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த சாய்குமார் (24) தனது வீட்டின் அருகே வசித்து வந்த தீபிகா என்ற பெண்ணை 6 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தற்போது தீபிகா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்கள் திருமணத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே தீபிகாவின் தந்தையான, விருப்ப ஓய்வு பெற்ற ஏட்டு பாலகுமார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் கல்லூரி படிக்கும்போதை இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஜூன் மாதம், பெங்களூரில் திருமணம் செய்து கொண்டனர். இந்த சம்பவம் பாலகுமாருக்கு தெரியவர கடும் அதிர்ச்சி அடைந்தார்.
தற்போது சொந்த ஊருக்கு திரும்பிய இருவரும் தந்தை பாலாஜி, தாய், சகோதரன், அவரது மனைவி ஆகியோருடன் வசித்து வருகின்றனர். இதில் தீபிகா மற்றும் சாய்குமாரின் சகோதரர் மனைவி ஆகியோர் கர்ப்பமாக உள்ளனர். காதல் திருமணம் செய்த மகள் இருப்பிடம் அறிந்த தனது நண்பர்கள் 4 பேருடன் இரவில் வேப்பம்பட்டுக்கு வந்த பாலகுமார், மகள் தீபிகாவை சந்தித்தார். அப்போது, 'அம்மாவின் உடல்நிலை சரியில்லை, வீட்டுக்கு வா' என்று தீபிகாவை அழைத்துள்ளார். தந்தையின் அழைப்பை ஏற்க தீபிகா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலகுமார், மறைத்து வைத்திருந்த ஆசிட்டை தீபிகாவின் முகத்தில் வீசியுள்ளார். தடுக்க வந்த மாமியார் பாக்கியலட்சுமி, உறவினர் கர்ப்பிணியான திவ்யா ஆகியோர் மீதும் ஆசிட் வீசினார்.
பின்னர் தீபிகாவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றனர். இதுபற்றி செவ்வாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த பாலகுமார், வேப்பம்பட்டு சாலையில் தீபிகாவை காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பினார். பின்னர், போன் மூலம் வீட்டுக்கு தெரியப்படுத்தினார். உறவினர்கள் விரைந்து வந்து முகம் கருகிய தீபிகா மற்றும் வீட்டில் இருந்த பாக்கியலட்சுமி, திவ்யா ஆகியோரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிந்து தீபிகாவிடம் விசாரணை நடத்தினர். இதில், '5 மாத கர்ப்பிணி என்றும் பாராமல், சாய்குமாரை விட்டுவிட்டு வந்துவிடுமாறு தனத தந்தை பாலகுமார் கூறியுள்ளார். இதனால், தந்தையுடன் செல்ல தீபிகா மறுத்துள்ளார். இதனால் அவரது வயிற்றில் உதைத்து சித்ரவதை செய்ததாகவும், கொலை செய்து விடுவேன்' என்று மிரட்டியதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து பாலகுமார் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
newstm.in



