Theme Check

அதிரடி! பேருந்தில் எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்கக்கூடாது!!

அதிரடி! பேருந்தில் எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்கக்கூடாது!!

அதிரடி! பேருந்தில் எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்கக்கூடாது!!
X

பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு எச்சில் தொடாமல் பேருந்தில் பயணச்சீட்டு வழங்க வேண்டும் என நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு நடத்துநர் பயணச்சீட்டு வழங்கும் பொழுது எச்சில் தொட்டு பயணச்சீட்டுகளை கொடுப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இவ்வாறு எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்குவதால் பயணிகள் பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளும் பொழுது மிகுந்த மனவுளைச்சலுடன் பெற்றுக்கொள்கின்றனர். எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்குவதால் சுகாதார கேடு விளைவிக்கும் என்பதால் முற்றிலும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

govt-bus-ticket

எனவே, இனிவரும் காலங்களில் நடத்துனர்கள் பேருந்தில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் பொழுது தண்ணீர் உறிஞ்சும் ஸ்பாஞ்சை (Sponge) பயன்படுத்தி பயணச்சீட்டு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து நடத்துனர்களுக்கும் எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்குவதை முற்றிலும் தவிர்க்க தக்க அறிவுரைகள் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கவும், தண்ணீர் உறிஞ்சும் ஸ்பான்சை ஏற்பாடு செய்து நடத்துனர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

newstm.in

Next Story
Share it