Theme Check

அதிரடி! பெற்றோரை பட்டினி போட்ட மகனின் சொத்துகள் பறிப்பு!!

அதிரடி! பெற்றோரை பட்டினி போட்ட மகனின் சொத்துகள் பறிப்பு!!

அதிரடி! பெற்றோரை பட்டினி போட்ட மகனின் சொத்துகள் பறிப்பு!!
X

பெற்றோரைக் கொடுமைப்படுத்தியதால் மகனுக்கு எழுதிக் கொடுத்த சொத்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் – சாந்தகுமாரி தம்பதி தங்களுக்குச் சொந்தமாக இருந்த வீடு மற்றும் 10 ஏக்கர் நிலத்தை தங்களது மகன் பெயருக்கு எழுதிக் கொடுத்தனர்.

சொத்துகள் அனைத்தும் தனது பெயருக்கு மாற்றப்பட்டதை அடுத்து மகன் பெற்றோர்களுக்கு உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மகனின் கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாத தம்பதியினர் அவர் மீது புகார் கொடுக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனை சந்திக்க வந்தனர்.

vlp 1

அப்போது அவர் இல்லாததால் இருவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த ஆட்சியர் அவர்களை நேரில் அழைத்துப் பேசினார். அப்போது இந்த தம்பதியினர் மகன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மோகன், மகனுக்கு எழுதி கொடுத்த சொத்து பத்திரங்களை ரத்து செய்ய உத்தரவிட்டார். ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு அந்த முதிய தம்பதியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it