அதிரடி! கோவில் நிலத்தை ஆக்கிரமித்தால் குற்றவியல் நடவடிக்கை!!
அதிரடி! கோவில் நிலத்தை ஆக்கிரமித்தால் குற்றவியல் நடவடிக்கை!!

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவில்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் அன்னை தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அடுத்த அதிரடியாக கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளில் சட்டப்பூர்வமான வாடகை ஒப்பந்தம் ஏதுமின்றியும், உரிய வாடகை செலுத்தாமலும் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வரும் நபர்கள் மீது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கோயில் சொத்துகளை சட்டப்படியான உரிமையின்றி அனுபவித்து வரும் நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக தனிநபர்கள் தரப்பில் காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகார்களுக்கு தேவையான ஆவணங்களையும் கோயில் நிர்வாகிகள் வழங்கி ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
newstm.in

