Theme Check

அதிரடி! எல்லையில் பயங்கரவாதி சுட்டுக்கொலை!!

அதிரடி! எல்லையில் பயங்கரவாதி சுட்டுக்கொலை!!

அதிரடி! எல்லையில் பயங்கரவாதி சுட்டுக்கொலை!!
X

காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானிய பயங்கரவாதியை எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

காஷ்மீரில் சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய பயங்கரவாதிகள் முயற்சி செய்து வருகின்றனர். அவர்களை தடுக்கும் விதமாக எல்லையில் இந்திய பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குப்வாரா மாவட்டம் டங்ஹர் செக்டார் பகுதியில் உள்ள தர்ஷன் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இரு நபர் இந்திய எல்லைக்குள் நுழைவதை இந்திய ராணுவ வீரர்கள் கண்டனர்.

JK

இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட ராணுவத்தினர் அந்த இருவரையும் தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது, இருவரும் இந்திய எல்லைக்குள் முன்னேறி வந்து இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதனையடுத்து இந்திய எல்லைப்பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அந்த நபரிடமிருந்து துப்பாக்கிகள், போதைப்பொருள் உள்ளிட்டவை கைப்பற்றினர். இதையடுத்து தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it