Theme Check

அதிரடி! அழகிகளுக்காக காத்திருந்த கொள்ளையனை மடக்கிப்பிடித்த போலீஸ்!!

அதிரடி! அழகிகளுக்காக காத்திருந்த கொள்ளையனை மடக்கிப்பிடித்த போலீஸ்!!

அதிரடி! அழகிகளுக்காக காத்திருந்த கொள்ளையனை மடக்கிப்பிடித்த போலீஸ்!!
X

சென்னை பூக்கடை பகுதியில் உள்ள துணிக்கடையில் ரூபாய் 5 லட்சமும், பேக் கடையில் ரூபாய் 1.5 லட்சமும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக கடையின் உரிமையாளர்கள் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து சாலையில் இருந்த 50க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பின் தொடர்ந்த போது மர்ம நபர் ஒருவர் திருவல்லிக்கேணி பெரிய தெருவுக்குச் சென்றது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர் தங்கி இருந்த லாட்ஜில் இருந்து கார் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

அவர் லாட்ஜை புக் செய்வதற்காக கொடுத்த மொபைல் எண்ணை ட்ரேஸ் செய்த போலீசார் அவர் மதுரையில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் மதுரை சென்ற போலீசார் அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

Chennai-Theft

விசாரணையில் அவர் பெங்களூரை பூர்வீகமாக கொண்ட ஆனந்த் (34) என்பது தெரியவந்தது. பள்ளிப்படிப்பை தாண்டாத இவர் பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணத்தில் சிறு வயது முதலே திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

சென்னை பூக்கடையில் கொள்ளை அடித்து விட்டு நேராக மதுரை சென்று அங்கு பெண்களோடு உல்லாசமாக இருப்பதற்காக பெண்களை புக் செய்து அவர்களுக்காக காத்திருந்தபோது போலீசார் கைது செய்துள்ளனர்.

Pros 1

இவர் மீது பெங்களூர் உட்பட கர்நாடக மாநிலங்கள் ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல காவல் நிலையங்களில் சுமார் 40க்கும் மேற்பட்ட திருட்டு, கொள்ளை வழக்குகள் இருப்பதும் பெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it