ஐஆர்சிடிசி முன்பதிவில் அதிரடி மாற்றம்!!
ஐஆர்சிடிசி முன்பதிவில் அதிரடி மாற்றம்!!

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம், செயலி மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கான வரம்பை இந்தியன் ரயில்வே அதிகரித்துள்ளது.
அதன்படி, ஆதார் எண்ணை இணைக்காமல், பயனர் அடையாளத்தை பயன்படுத்தி, இணையதளம் மற்றும் செயலியில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்ற நிலை இருந்தது வந்தது.
தற்போது அந்த எண்ணிக்கை 12 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 6க்கு மேல் டிக்கெட் புக் செய்ய பயணிகள் கஷ்டப்பட்டு வந்த நிலையில், அந்த குறையை போக்கும் விதமாக ஆதார் இணைக்காத பயணிகளுக்கான ஒரு மாத டிக்கெட் வரம்பு 12ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதே போல், ஆதார் எண்ணுடன் பயனர் அடையாளத்தை பயன்படுத்தி, ஒருமாதத்தில் அதிகபட்சமாக 12 பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்ற விதி தற்போது 24ஆக மாற்றப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் ரயில் பயணிக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த முடிவால் ஐஆர்சிடிசி கணக்கில் இருந்து குடும்ப உறுப்பினர்களுக்கு டிக்கெட் புக் செய்யும் வாடிக்கையாளர்கள் அதிக பயன்பெறுவார்கள்.
newstm.in

