Theme Check

ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்.. ரயில்வே அறிவிப்பு !!

ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்.. ரயில்வே அறிவிப்பு !!

ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்.. ரயில்வே அறிவிப்பு !!
X

ரயிலில் பயணம் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம், ரயில்நிலையங்களில் உள்ள கவுண்டர் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதில், பயணிகளுக்கு வசதியாக ஆதார் இணைக்கப்படாத பயனர் தங்களது ஐடி மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்.

ஆதார் உடன் இணைக்கப்பட்ட பயனர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சம் 12 டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம் என்ற நடைமுறை அமலில் இருந்தது. தற்பொழுது இது அதிகரிக்க படுவதாக இந்தியா ரயில்வே தரப்பில் அறிவிப்பை வெளியிட்டுயுள்ளனர்.

train speed

பயணிகளுக்கு வசதியாக ஆதார் இணைக்கப்படாத பயனர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கான வரம்பை 12 டிக்கெட்டுகளாகவும், ஆதார் உடன் இணைக்கப்பட்ட பயனர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சம் 12 டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கான வரம்பை 24 அதிகரிக்க இந்தியா ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதில் ரயில் பயணிக்கும் பயனாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ரயில்வே முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டில் உள்ள பயணிகளில் ஒருவர் ஆதார் மூலம் சரி செய்யபடுவார் என தெரிவிக்கப்பட்டுகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it