ரயில்வே ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்!!
ரயில்வே ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்!!

ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ஆப்-ஐ பயன்படுத்தி ரயிலில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு செயல்முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன், யூசர்கள் தங்கள் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் கணக்கு ஆகியவற்றை ஒருமுறை வெரிபிகேஷன் செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வெரிபிகேஷனை பூர்த்தி செய்யாதவர்களால் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது என்றும் ஐஆர்சிடிசி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்த மாற்றமானது கொரோனா தொற்றுநோய் தொடங்கியது முதல் தற்போது வரை ஆப் அல்லது இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

அதற்கான வழிமுறை குறித்து பார்க்கலாம்.
முதலில் ஐஆர்சிடிசி (IRCTC) ஆப் அல்லது இணையதளத்தில் லாகின் செய்ய வேண்டும். ஐஆர்சிடிசி ஆப் அல்லது இணையதளத்திற்குள் உள்ள வெரிபிகேஷன் விண்டோவை கிளிக் செய்யவும். அதில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்.
இதனையடுத்து வலதுபுறத்தில் வெரிபிகேஷனுக்கான விருப்பத்தையும் இடதுபுறத்தில் எடிட் செய்வதற்கான பொத்தானையும் காண்பீர்கள்.
அதன் பின்னர் மெயில் ஐடி மற்றும் செல்போனுக்கு வந்த ஓடிபி விவரங்களை தனித்தனியே உள்ளிடவும். அதன் பின்னர் உங்கள் ஐஆர்சிடிசி அக்கவுண்ட் மூலமாக நீங்கள் பயணிக்க விரும்பும் ரயிலுக்கான ஆன்லைன் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.
newstm.in

