அதிரடி ஆஃபர்.. மளிகை வாங்கினால் ‘வலிமை’ டிக்கெட் இலவசம்..!
அதிரடி ஆஃபர்.. மளிகை வாங்கினால் ‘வலிமை’ டிக்கெட் இலவசம்..!

போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் தயாரிக்கப்பட்ட ‘வலிமை’ திரைப்படம் வருகிற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், 2999 ரூபாய்க்கு மேல் மளிகை பொருட்கள் வாங்கினால் ‘வலிமை’ படத்துக்கான டிக்கெட் இலவசம் என, வேலூரில் உள்ள கூட்டுறவு அங்காடி மையம் ஒன்று தெரிவித்துள்ளது.

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட காகிதபட்டறை பகுதியில் மத்திய அரசின் தென்னிந்திய பன் மாநில கூட்டுறவு பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது.
இந்த அங்காடியில் பொருள் வாங்குவோருக்கு அஜித் நடிப்பில் உருவாகி தற்போது வெளியாக இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்துக்கான டிக்கெட் இலவசம் என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.

அதில், ‘2999 ரூபாய்க்கு மேல் மளிகைப் பொருள் வாங்குவோருக்கு காட்பாடி சில்க் மில்லில் உள்ள தனியார் திரையரங்கில் வெளியாகும் ‘வலிமை’ படத்துக்கான இலவச டிக்கெட் மற்றும் பாப்கார்ன், கூல்டிரிங்ஸ் அடங்கிய 500 ரூபாய் தொகுப்பு இலவசம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

