Theme Check

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு!!

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு!!

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு!!
X

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மனசு என்று எழுதப்பட்ட பாலியல் புகார் பெட்டி அமைக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவிகள் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை தடுக்கவும், மாணவர்களுக்கு எதிரான குற்றச்செயல்களை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து அறிவுறுத்த வேண்டும் என்றும், பாலியல் தொடர்பாக புகார் அளிக்க இலவச எண்கள் போன்ற பல்வேறு திட்டங்களை பள்ளிக்கல்வித் துறை செய்து வருகிறது.

DPI

இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்மாணவர் மனசுஎன்று எழுதப்பட்ட பாலியல் புகார் பெட்டிகளை வரும் 31ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் 37,356 பள்ளிகளிலும் மாணவர் மனசு புகார் பெட்டி வைக்க வேண்டும் என்றும், புகார் ஏதேனும் வரும் பட்சத்தில் அதன்மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

newstm.in

Next Story
Share it