நடிகர் அஜித்திற்கு படப்பிடிப்பில் காயம்? பரபரப்பு வீடியோ வெளியீடு!!
இயக்குநர் வினோத் இயக்கத்தில், வலிமை படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்திற்கு காயம் ஏற்பட்டது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கிய வினோத் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தை கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

இயக்குநர் வினோத் இயக்கத்தில், வலிமை படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்திற்கு காயம் ஏற்பட்டது.
‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கிய வினோத் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.
#Valimai shooting spot#அய்யோ_அம்மா_பைக்_ரேஸ் pic.twitter.com/oZlkrDvPmz
— adirs SeeKa (@maasterda) February 19, 2020
சென்னையில் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பின் போது, நடிகர் அஜித் பைக் சண்டை காட்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து நடிகர் அஜித் கீழே விழுந்ததால், காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் படப்பிடிப்பு தளத்திலேயே 20 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொண்ட பின்னர், மீண்டும் காயத்தோடு வந்து நடிகர் அஜித் தொடர்ந்து காட்சியில் நடித்துக் கொடுத்தார்.

கீழே விழுந்து காயம் பட்டும், காயோத்தோடு நடிகர் அஜித் தொடர்ந்து படபிடிப்பில் ஈடுபட்டதை பார்த்த படக்குழுவினர் வியப்படைந்தனர். தன்னுடைய காட்சிகளின் படபிடிப்பு முழுவதுமாக முடிந்த பின்னர் நடிகர் அஜித், குடும்ப மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றதாகக் கூறப்படுகிறது. நடிகர் அஜித்திற்கு காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #GetWellSoonTHALA என்ற ஹேஸ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்துவருகின்றனர். இந்த ஹேஸ்டேக் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் டிரெண்டாகி வருகிறது
newstm.in

