உயரமான மலையின் விளிம்பில் நடிகர் அஜித் ! - வைரலாகும் புதிய புகைப்படம் !!

உயரமான மலையின் விளிம்பில் நடிகர் அஜித் ! - வைரலாகும் புதிய புகைப்படம் !!

உயரமான மலையின் விளிம்பில் நடிகர் அஜித் ! - வைரலாகும் புதிய புகைப்படம் !!
X

நடிகர் அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடித்துள்ள திரைப்படம் வலிமை. திரைப்படதின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ajith bike

இந்த நிலையில், பைக்கில் சுற்றும் பயணத்தை அஜித் தொடங்கினார். வட இந்தியாவில் அஜித் பைக்கில் தனது நண்பர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். வாகா எல்லைப் பகுதிக்கு சென்றவர் அங்கிருந்த ராணுவ வீர்களுடன் உரையாடியதும், கையில் தேசியக் கொடியுடன் வாகா எல்லையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வைரலானது.

அதனைத் தொடர்ந்து வட இந்தியாவின் வறண்ட பாலைவனப் பகுதிகளில் அஜித் தனது நண்பர்களுடன் பைக்கில் பயணம் மேற்கொண்டார். கடும் வெயிலில் பைக் நிழலில் அவர் ஓய்வெடுக்கும் புகைப்படம் இரு தினங்கள் முன்பு வெளியானது. இந்தப் பயணத்தின் போது ரசிகர்களும் உற்சாகத்துடன் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ajith bike

இந்த நிலையில், உயரமான பாறை விளிம்பில் நின்று அஜித் எடுத்திருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள். ஓய்வுக்காகவும், விடுமுறையை கழிக்கவும் சொகுசான இடங்களுக்கு நட்சத்திரங்கள் செல்வதுதான் வாடிக்கை. ஆனால், அஜித் கடுமையான வறண்ட பாலைவனத்தில் பைக் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.


newstm.in

Tags:
Next Story
Share it