நடிகர் ஆர்யா வேண்டுகோள் !!
நடிகர் ஆர்யா வேண்டுகோள் !!

இந்தியாவில், கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு வருகிறார்கள்.
இந்தியாவில் இப்போது பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின், சீரம் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்ட், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இந்நிலையில், பிரபல நடிகர் ஆர்யா இன்று கொரோனா முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இதுகுறித்த தகவலை அவருடைய ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அத்துடன், “நான், கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக்கொண்டேன். அனைவரும் விரைவில் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:
Next Story

