கொரோனா நிதியாக ரூ.10 லட்சம் கொடுத்த நடிகர் ஜெயம் ரவி !!
கொரோனா நிதியாக ரூ.10 லட்சம் கொடுத்த நடிகர் ஜெயம் ரவி !!

தமிழகத்தில் கொரோனா பரவல் மிகத்தீவிரமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் தீவிர தடுப்புப்பணியில் களத்தில் வேலை செய்து வருகின்றனர். இதனிடையே கொரோனா நிவாரண நிதியாக மக்கள் உதவி அளிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். அதற்காக வங்கி கணக்கு எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.பலரும் தங்களால் முடிந்த உதவியை தமிழக அரசுக்காக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து காசோலையை அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

