நடிகர் கமல், அர்ஜூன், வடிவேலுவை தொடர்ந்து மற்றுமொரு பிரபல நடிகருக்கு கொரோனா..!!

நடிகர் கமல், அர்ஜூன், வடிவேலுவை தொடர்ந்து மற்றுமொரு பிரபல நடிகருக்கு கொரோனா..!!

நடிகர் கமல், அர்ஜூன், வடிவேலுவை தொடர்ந்து மற்றுமொரு பிரபல நடிகருக்கு கொரோனா..!!
X

தமிழ் சினிமாவில் தற்போது சிறந்த நடிகராக இருப்பவர் அருண் விஜய். நடிகர் விஜயகுமாரின் மகனான இவர் சமீபத்தில் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். 'என்னை அறிந்தால்', 'செக்க சிவந்த வானம்' ஆகிய படங்களில் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து மக்களிடம் பெயர் வாங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் 2ஆவது இன்னிங்ஸில் தொடர்ந்து சிக்ஸர்களாக அடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இரண்டாவது இன்னிங்சில் அவர் நடித்த தடையற தாக்க படத்தை தொடர்ந்து சினிமாவில் அருண் விஜய்க்கு ஏறுமுகம் தான்.

இந்நிலையில் தற்போது அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து டிவிட்டரில் "தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதன் காரணமாக வீட்டு தனிமையில் இருப்பதாகவும் அறிவித்துள்ளார். டாக்டர் அறிவுரைப்படி பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து வருவதாகவும்" டிவிட்டரில் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதற்கு முன் நடிகர் அர்ஜூன், நடிகர் விக்ரம், உலகநாயகன் கமல்ஹாசனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.


Tags:
Next Story
Share it