அப்பத்தா மரணம்.. உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்த நடிகர் கார்த்தி !!

அப்பத்தா மரணம்.. உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்த நடிகர் கார்த்தி !!

அப்பத்தா மரணம்.. உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்த நடிகர் கார்த்தி !!
X

அமீர் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்திக், சரவணன், நடிகை பிரியாமணி நடிப்பில் கெடந்த 2007ல் வெளிவந்த திரைப்படம் பருத்தி வீரன். இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிபெற்றது.

அதேநேரத்தில் நடிகர் கார்த்தி இப்படத்தில் தான் அறிமுகமானார். முதல் படத்திலேயே நடிகர் கார்த்தியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் பருத்தி வீரன் படத்தில் நடித்திருந்த வயதான மூதாட்டி ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இந்த படத்தில் நடித்திருந்த பஞ்சவர்ண பாட்டி நேற்று உயிரிழந்தார். பஞ்சவர்ணம் பாட்டி பருத்தி வீரன் படத்தில் கார்த்திக்கு அப்பத்தாவாக நடித்திருந்தார். இந்நிலையில் அவரது மறைவுக்கு நடிகர் கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண்முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.


newstm.in

Tags:
Next Story
Share it