அண்ணா வீடு திரும்பினார்- நடிகர் கார்த்தி ட்வீட்..!

அண்ணா வீடு திரும்பினார்- நடிகர் கார்த்தி ட்வீட்..!

அண்ணா வீடு திரும்பினார்- நடிகர் கார்த்தி ட்வீட்..!
X

கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை எடுத்து வந்த நடிகர் சூர்யா வீடு திரும்பிவிட்டதாக அவருடைய சகோதரர் கார்த்தி தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகர் சூர்யா ட்விட்டரில் தெரிவித்திருந்தார். மேலும், வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும் என பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் அவருடைய சகோதரர் நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து சூர்யா வீடு திரும்பிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், வீட்டில் இருக்கும் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். சூர்யா சில நாட்கள் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பார். அவர் குணமடைய வேண்டும் என மக்களின் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை என்று பதிவில் நடிகர் கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.


Tags:
Next Story
Share it