நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி!!
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி!!

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகராக கொண்டாடப்பட்டு வரும் ரஜினிகாந்துக்கு சமீபத்தில் தான் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. வரும் தீபாவளியன்று அண்ணாத்த படம் வெளியாக இருப்பதால், அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக் குறைபாடு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இது குறித்து லதா ரஜினிகாந்த் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முழு உடல் பரிசோதனைக்காகவே நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக செய்யும் பரிசோதனை தான். அவர் ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
முழு உடல் பரிசோதனைக்காக ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் தங்கி இருப்பார்.
தற்போது முழு உடல் நலத்துடன் ரஜினி ஆரோக்கியமாக உள்ளார். அவருடன் அவருடைய உறவினரும் நடிகருமான ராகவேந்திரா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பரிசோதனை முடிந்ததும் இன்று அக்டோபர் 29 காலையிலோ வீடு திரும்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

