மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்
மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்

திரைத்துறையில் சாதனை படைத்ததற்காக வாழ்நாள் சாதனைக்கான "தாதா சாகேப் பால்கே" விருது அண்மையில் பெற்றார் நடிகர் ரஜினிகாந்த். மத்திய அரசு இந்த விருதை அவருக்கு அளித்து கௌரவப்படுத்தியது. இதனிடையே, ரஜினி நடித்த ‘அண்ணாத்த' தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ளது. இதனால் ரஜினியின் ரசிகர்கள் இரட்டை கொண்டாட்டத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு கடந்த 28ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தலைவலி மற்றும் லேசான மயக்கம் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் உடல் முழு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், நடிகர் ரஜினிகாந்துக்கு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் சிறிய அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அதை நீக்குவதற்கான முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் காலை சிகிச்சை மூலம் அடைப்பு சரிசெய்யப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை தேதி மருத்துவமனையிலேயே ஓய்வு எடுத்து வந்தார். டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்த அவரை, அவரது மனைவி லதா மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்து கவனித்து வந்தனர். ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

எனவே, அவர் எப்போது வீடு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.இந்த நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் இரவு பத்து மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்துக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
newstm.in

