கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்!

இந்தியாவில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கான ஒரே வழி தடுப்பூசி தான் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அதனால் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்கிறார்கள். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினரும் தடுப்பு செலுத்திக் கொண்டு மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள்.
அந்த வகையில், கடந்த ஒருமாத காலமாக ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், நேற்றைய தினம் சென்னை திரும்பினார். ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பை முடித்து விட்டு நேற்று தனி விமானம் மூலம் அவர் சென்னை வந்து இறங்கினார்.
வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் சில நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலையில், இன்றைய தினம் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இதனை அவரது மகள் சவுந்தரியா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாம் ஒன்றாக இணைந்து இந்த கொரோனா தொற்றை வென்றெடுக்க வேண்டும் குறிப்பிட்டு ரஜினிகாந்த் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தினை அவர் பகிர்ந்துள்ளார்.

