Theme Check

நடிகர் சத்யராஜின் சகோதரி காலமானார்!!

நடிகர் சத்யராஜின் சகோதரி காலமானார்!!

நடிகர் சத்யராஜின் சகோதரி காலமானார்!!
X

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடிகர் சத்யராஜின் சகோதரி கல்பனா மன்றாடியார் காலமானார். அவருக்கு வயது 66.

காங்கிரசைச் சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர் மறைந்த நல்லதம்பி சர்க்கரை மன்றாடியாரின் மகன்அர்ஜூன் மன்றாடியார். இவர் காங்கேயம் தொகுதிமுன்னாள் தி.மு.. எம்.எல்..வான ராஜ்குமாரின் உடன் பிறந்த தம்பி.

இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை அரண்மனை சீரப்பள்ளத்தோட்டத்தை சேர்ந்தவர். அர்ஜுன் மன்றாடியார் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

kalpana 1

இவரது மனைவி .கல்பனா மன்றாடியார் (66). இவர் நடிகர் சத்யராஜின் உடன் பிறந்த தங்கை ஆவார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு வாரமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்பனா சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். மறைந்த என்.அர்ஜுன் மன்றாடியார் - .கல்பனா தம்பதிக்கு .மகேந்தர் என்ற மகன் உள்ளார். இவர் நடிகர் சத்யராஜின் மகளான டாக்டர் திவ்யாவை திருமணம் செய்து உள்ளார்.

newstm.in

Next Story
Share it