நடிகர் ஷாருக்கான் மகனுக்கு சர்வதேச போதை கடத்தல் கும்பலுடன் தொடர்பு? விசாரணையில் பரபரப்பு !!

நடிகர் ஷாருக்கான் மகனுக்கு சர்வதேச போதை கடத்தல் கும்பலுடன் தொடர்பு? விசாரணையில் பரபரப்பு !!

நடிகர் ஷாருக்கான் மகனுக்கு சர்வதேச போதை கடத்தல் கும்பலுடன் தொடர்பு? விசாரணையில் பரபரப்பு !!
X

மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்ற சொகுசு கப்பலில் போதை பொருட்களுடன் கேளிக்கை விருந்து நடைபெற்றது. ஏற்கனவே மோப்பம் பிடித்து உள்ளே பயணிகள் போன்று சென்ற பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி 8 பேரை போதைப் கைது செய்தனர். அவர்களில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர் ஆவார். 8 பேரிடமும் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Shahrukh-Khan-son-Aryan-khan

இந்த நிலையில் 8 பேரையும் வருகிற 7ஆம் தேதி வரை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் அனுமதி பெற்றுள்ளனர். அதன்படி இன்று காலை ஆர்யன் கான் உள்பட 8 பேரிடமும் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டது. அவர்களது செல்போனில் பதிவாகி இருந்த உரையாடல்கள் மற்றும் புகைப்படங்களை காட்டி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதற்கு 8 பேரும் அளித்த பதில்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. வாக்கு மூலமாகவும் பெறப்பட்டது.

போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆர்யன் கான் மீது பெரியளவில் சந்தேகம் அடைந்துள்ளனர். ஆர்யன் கானின் செல்போனில் பதிவாகி இருந்த தொடர்புகள் அனைத்தும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன. அடுத்தக்கட்ட விசாரணைகளில் தான் இது தொடர்பான தகவல்கள் தெரிய வரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

Shahrukh-Khan-son-Aryan-khan

ஆர்யன் கானுக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது பாலிவுட் திரை உலகை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ஆர்யன்கான் மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேர் மீதும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் போதைப்பொருள் பிரிவு சட்டத்தின் கீழ் தண்டனை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இந்தநிலையில் ஆர்யன் கானை மீட்க பாலிவுட் திரை உலகின் பல்வேறு தரப்பினரும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்தி திரை உலகின் நடிகர், நடிகைகள் தொடர்ந்து ஷாருக்கானுடன் செல்போனில் பேசி ஆறுதல் கூறி வருகிறார்கள். இந்த நடவடிக்கைகளை மும்பை போலீசார் கண்காணித்து வருவதாக தெரிகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it