Theme Check

நடிகர் பாண்டு மறைவுக்கு சூரி இரங்கல் !!

நடிகர் பாண்டு மறைவுக்கு சூரி இரங்கல் !!

நடிகர் பாண்டு மறைவுக்கு சூரி இரங்கல் !!
X

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான பாண்டு (74) கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலாமானார்.

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான பாண்டு. ‘சின்னத் தம்பி’, 'திருமதி பழனிசாமி’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘காதல் கோட்டை’ ‘ஏழையின் சிரிப்பில்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகராக மட்டுமன்றி குணச்சித்திர நடிகராகவும் தடம் பதித்துள்ளார் பாண்டு.

பாண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை வடிவமைத்தவர் ஆவார். இன்று அதிகாலை காலமான பாண்டுக்கு வயது 74.

கொரோனா தொற்று ஏற்பட்டு பாண்டுவும் மற்றும் அவரது மனைவி குமுதாவும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்தப்போதும் இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார்.

அவரது திடீர் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நடிகர் சூரி அவரது இரங்கலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். "மூத்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பாண்டு அண்ணனின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது.பெரும் நடிகர் மட்டுமல்ல, சிறந்த ஓவிய கலைஞர், பல நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்தவர். சிறந்த மனிதர் பிறரன்பு பண்பாளரின் பிரிவில் வாடும் குடும்பத்தினர் க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்" என பதிவிட்டுள்ளார்.



Tags:
Next Story
Share it