டிராஃபிக் ராமசாமி மறைவு - நடிகர் சூரி இரங்கல் !!

டிராஃபிக் ராமசாமி மறைவு - நடிகர் சூரி இரங்கல் !!

டிராஃபிக் ராமசாமி மறைவு - நடிகர் சூரி இரங்கல் !!
X

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, உடல் நிலைக்குறைவால் காலமானார்.

தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கும், நேர்மையற்ற அரசு அதிகாரிகளுக்கும் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர் டிராஃபிக் ராமசாமி. இவருக்கு வயது 87.கடந்த 20 ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சற்று முன் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சூரி அவர் மறைவிற்கு ட்விட்டரில் இரங்கலை தெரிவித்துள்ளார். "சமுதாயத்தின் மீது அக்கறையும், நீதித்துறையின் மீது நம்பிக்கையும் கொண்டு சமுதாயத்தில் நிகழும் தவறான செயல்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவரின் குரல் ஓய்ந்துவிட்டது என்ற செய்தி வருத்தமளிக்கிறது. அவரது ஆத்மா இறைவனடி சேர பிராத்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


Tags:
Next Story
Share it