இயக்குநரை திட்டிய நடிகர் சூர்யா! நஷ்ட ஈடும் வழங்கி பிரச்சனையை தீர்த்தார் !
இயக்குநரை திட்டிய நடிகர் சூர்யா! நஷ்ட ஈடும் வழங்கி பிரச்சனையை தீர்த்தார் !

சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்த படம் முறைகேடாக திருடப்பட்டது என்று தெரிந்ததும் சம்பந்தபட்ட நிறுவனத்திற்கு நடிகர் சூர்யா நஷ்ட ஈடு வழங்கியுள்ளார்.
சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான படம் ராமே ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும். சின்ன பட்ஜெட்டில் வெளியான இந்த படம் நல்ல விமர்சனம் பெற்றது. இந்த படத்தை அரிசில் மூர்த்தி எழுதி இயக்கியிருந்தார்.
இந்நிலையில் இந்த படம் 2016ஆல் மராத்தியில் எடுக்கப்பட்ட ரங்கா படாங்கா படத்தின் கதையை அப்பட்டமாக தழுவி எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. தற்போது இந்த விஷயம் வெளியே தெரியவந்துள்ளது.

இது நடிகர் சூர்யாவுக்கு முன்னதாகவே தெரியாததால் இயக்குனர் அசிரில் மூர்த்தியை அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் சம்பந்தபட்ட மூலப்படத்தை எடுத்தவர்களுக்கும் நடிகர் சூர்யா தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் இழப்பீட்டை வழங்கியுள்ளார் என கூறப்படுகிறது. நடிப்பில் கவனம் செலுத்தி நடிகர் சூர்யா அவ்வப்போது சில படங்களையும் தயாரித்து வருகிறார்.
இதனால் அவரால் முழுவதுமாக தயாரிப்பு நிறுவனத்தில் கவனம் செலுத்த முடியவில்லையா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் மராத்தியில் எடுக்கப்பட்ட படம் என சூர்யாவுக்கு தெரியாமல் போனது எப்படி எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
newstm.in

