கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகர் யோகி பாபு !!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகர் யோகி பாபு !!

தமிழ் திரையுலகில் பரபரப்பாக இருப்பர் காமெடி நடிகர் யோகிபாபு. இவர் கதையின் நாயகானகவும் கோலமாவு கோகிலா, தர்மபிரபு உட்பட சிலப்படங்களில் நடித்துள்ளார். இவர் குறுகிய காலத்தில் தனது திறமையினால் உச்சத்தை தொட்டவர் என்று கூறலாம். இவர் அஜித்துடன் வேதாளம், விஜய்யுடன் சர்கார் இப்படி பல மாஸ் ஹீரோ படங்களில் காமெடியானாக நடித்து திரையரங்குகளை தனது நகைச்சுவையால் அதிர வைத்துள்ளார்.
கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டால் அதன் பக்கவிளைவுகள் எப்படி இருக்குமோ என்ற பயத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் மக்களிடையே இன்னமும் சற்று தயக்கம் இருந்து வருகிறது. இந்த தயக்கத்தை போக்கும் விதத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா, விளையாட்டு துறை பிரபலங்கள் தாங்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் யோகிபாபு, தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தடுப்பூசி எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அவர், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும், பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
#GotVaccinated #GetVaccinated #CovidSheild #Staysafe pic.twitter.com/iHZS6n2Lcz
— Yogi Babu (@iYogiBabu) June 14, 2021

