மீண்டும் வருகிறார் நடிகை அனுஷ்கா.. நயதாராவுக்கு பதிலாக புதிய படத்தில் ஒப்பந்தம்?

மீண்டும் வருகிறார் நடிகை அனுஷ்கா.. நயதாராவுக்கு பதிலாக புதிய படத்தில் ஒப்பந்தம்?

மீண்டும் வருகிறார் நடிகை அனுஷ்கா.. நயதாராவுக்கு பதிலாக புதிய படத்தில் ஒப்பந்தம்?
X

தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து அசுர வளர்ச்சி அடைந்து முன்னணி நடிகையாக உயர்ந்த அனுஷ்கா திடீரென காணாமல் போனார். அவருக்கு படவாய்ப்புகள் குறைந்து, சில ஆண்டுகளாக அவரை வெள்ளித்திரையில் காணாமல் ரசிகர்கள் மறந்தே போயிவிட்டனர். ஆனால் நயன்தாரா அசுர வளர்ச்சி பெற்று வருகிறார்.

anusya

அடுத்தடுத்து படவாய்ப்புகள் அவருக்கு குவிந்து வருகிறது. தற்போது மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’. விக்னேஷ் சிவன் தயாரித்திருந்த இப்படம் கடந்த வாரம் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது. இதில் நடிகை நயன்தாரா கண்பார்வையற்ற பெண்ணாக நடித்திருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், நெற்றிக்கண் படம் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி தயாரிப்பு நிறுவனம், இப்படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதன் தெலுங்கு ரீமேக்கில் அனுஷ்காவை நடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

anuskavanam

இதில் அவர் நடிக்க சம்மதிப்பாரா என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். நடிகை அனுஷ்கா நடிப்பில் கடைசியாக சைலன்ஸ் திரைப்படம் வெளியானது, இதற்கு பின் அவர் எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it