கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படம்

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படம்

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படம்
X

கொரோனா தொற்றை வெல்லும் மிகப்பெரிய ஆயுதமாக கொரோனா தடுப்பூசி உள்ளது. எனினும் தடுப்பூசி குறித்து சமூகவலைதளங்களில் பரவும் தவறான தகவலால் ஆரம்பத்தில் தடுப்புசி செலுத்திக்கொள்ள மக்கள் பெரிதாக முன்வரவில்லை. எனவே தடுப்பூசி குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்வதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை கீர்த்தி சுரேஷும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
நடிகர் கீர்த்தி சுரேஷ் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த், அசோக் செல்வன், சூரி, ஹரீஷ் கல்யாண், இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், அஸ்வத் மாரிமுத்து, நடிகைகள் குஷ்பு, ஸ்ரீபிரியா, நயன்தாரா, ரம்யா பாண்டியன், ராதிகா ஆப்தே, பவித்ரா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், இன்று கீர்த்தி சுரேஷ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

newstm.in

Tags:
Next Story
Share it