Theme Check

அடுத்த அவதாரம் எடுத்தார் நடிகை நயன்தாரா..!

அடுத்த அவதாரம் எடுத்தார் நடிகை நயன்தாரா..!

அடுத்த அவதாரம் எடுத்தார் நடிகை நயன்தாரா..!
X

தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, முதன்முறையாக தனித்துவமான அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கால் பதித்துள்ளார். உலகின் மிகப்பெரிய லிப் பாம் கலெக்ஷன் கம்பெனியான - தி லிப் பாம் கம்பெனி எனும் நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய பயணத்தை அவர் துவக்கியுள்ளார்.

Lady superstar nayanthara enters into the beauty industry | அழகு சாதன  துறையில் கால்பதிக்கும் லேடி சூப்பர் ஸ்டார்! - Oneindia Tamil
நடிகை நயன்தாரா முன்னணி தோல் மருத்துவர் டாக்டர் ரெனிட்டா ராஜன் உடன் இணைந்து, காஸ்மெடிக்ஸ் வர்த்தக உலகில் ஒரு புதிய பிராண்டை அறிமுகம் செய்து, ஒரு புதிய அத்தியாயத்தை துவங்கியுள்ளார். லிப் பாம்கள் மட்டுமே வழங்கவுள்ள இந்நிறுவனம், நூற்றுக்கணக்கான வகைகளில் அதை வழங்கி சிறப்பிக்கவுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய லிப் பாம் அணிவகுப்பை வழங்கும் நிறுவனமாக இந்நிறுவனம் செயல்படவுள்ளது. நடிகை நயன்தாரா தான் பயன்படுத்தும் சொந்த சரும பராமரிப்பு பொருட்களில், மிகச்சிறப்பான செயல்திறன், உயர் பாதுகாப்பு அம்சங்களையே மிக முக்கிய அம்சமாக கருதுவதாகவும், அந்த இரு அம்சங்களும் இந்த தி லிப் பாம் கம்பெனிTM பொருட்களில் கண்டிப்பாக இடம்பெறும் என்றும் கூறியுள்ளார்.

டாக்டர் ரெனிட்டா ராஜன் கூறுகையில், ‘முதலில் நாங்கள் மிகவும் மென்மையான உதடுகளை பாதுகாக்கும் ஒரு சிறந்த உதட்டு தைலத்தை உருவாக்கவே திட்டமிட்டோம். அது படிப்படியாக வளர்ந்து, ஒரு தனிச்சிறப்பான தயாரிப்பாக மாறிவிட்டது.

Nayanathara enters Beauty Retail with The Lip Balm Company
எங்களது உதட்டு தைலம், லிப் பாம், உதடுகளை எடுப்பாக உயர்த்தவும், மென்மையாக்கவும், பளபளப்பாகவும், பொலிவாகவும் மாற்றுவது மட்டுமன்றி, இதில் உள்ள நியூரோ காஸ்மெட்டிக்ஸ் பொருட்கள் உதடுகளுக்கு ஆரோக்கிய உணர்வைத் தருவதுடன், மூளையின் ரசாயனங்களுடன் தொடர்புகொண்டு, மனதில் ஒரு சாந்தமான நிலையை ஏற்படுத்துகிறது’ என்றார்.

Next Story
Share it