பிறந்தநாளில் காதலனை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துவைத்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் !!

பிறந்தநாளில் காதலனை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துவைத்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் !!

பிறந்தநாளில் காதலனை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துவைத்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் !!
X

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலனை இந்த உலகுக்கு அறிமுகம் செய்துவைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் சூர்யா, கார்த்தி, தெலுங்கில் மகேஷ் பாபு, ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், உள்ளிட்ட பலருக்கும் நாயகியாக நடித்துள்ளார். தற்போது தமிழில் கமல் நடித்து வரும் 'இந்தியன் 2', சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'அயலான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

rakul preet singh

இந்தியிலும் பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். முன்னணி நடியாக உயர்ந்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே, ரகுல் ப்ரீத் சிங் பிறந்த நாளில் தனது காதலனை இந்த உலகுக்கு அறிமுகம் செய்துள்ளார். இந்தி திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர் என வலம் வரும் ஜாக்கி பாக்நானியை காதலித்து வருவதைத் தனது பிறந்த நாளை முன்னிட்டு ரகுல் ப்ரீத் சிங் உறுதிப்படுத்தியுள்ளார். ஜாக்கி பாக்நானியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் ரகுல் ப்ரீத் சிங் கூறியிருப்பதாவது, நன்றி அன்பே!! இந்த ஆண்டு நீ எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு. என் வாழ்க்கையில் வண்ணத்தைச் சேர்த்த உனக்கு என்னுடைய நன்றி. என்னை இடைவிடாமல் சிரிக்க வைப்பதற்கு நன்றி. நீ நீயாக இருப்பதற்கு நன்றி. இன்னும் ஒன்றாகச் சேர்ந்து அதிக நினைவுகளை உருவாக்குவதற்கு..., இவ்வாறு ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

rakul preet singh

அதேபோல், ரகுல் ப்ரீத் சிங் பிறந்த நாளை முன்னிட்டு ஜாக்கி பாக்நானி தனது பதிவில், நீயின்றி, நாட்கள் நாட்களாக இல்லை. நீயின்றி மிகவும் சுவையான உணவுகளில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. எனக்கு மிகவும் முக்கியமான மிக அழகான ஒரு ஆன்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். உன் புன்னகையைப் போலவே இந்த நாளும் உனக்கு மிகவும் பிரகாசமாகவும் உன்னைப் போல அழகாகவும் இருக்கட்டும். பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்பே, என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழில் த்ரிஷா நடிப்பில் வெளியான 'மோகினி' படத்தில் ஜாக்கி பாக்நானி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it